தொடக்கம்!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
தொடக்கம் என்பது முதன்மைதான் ...
மனது அனுமதி தரனும்தான்....!!!
தொடங்கியப்பின் பம்பரம்தான் ...
சுழன்றுகொண்டேஇருக்கும்தான் ....
மனது தூங்கவிடாது தான் ...
கல்வி,தொழில், வாழ்க்கை மேம்பாடு ...என்றுதான் ...!!!
திட்டங்களை தொடங்கவே
தயக்கம் என்றும் கொள்ளாதே ....
துணிந்து தொடங்கி வைத்திடு ...
நாளும் அதிலே நீந்திடு ...
தொடங்க தயக்கம் இருக்கும்தான் ...
தயங்கி பின்னே நிற்காதே...
தொடக்கம் வெற்றியின் வாசலே....
அதிஷ்டம் என்பது எண்ணம்தான் ...
உழைப்பு அதிலே முதன்மைதான்...
துணிந்து தொடங்கி வைத்திடு ...
துணிவை முதலீடு செய்திடு ...
தொடக்கம் என்பது முதல் வெற்றியே...
முடிவு என்பது மகத்தான வெற்றியே ...
தொடக்கம் எல்லாம் வெற்றியாகாது ...
தோல்வி எல்லாம் முடிவுமாகாது ...
முடிவு நீயே சொல்லாதே.....!!!
காலத்தின் கையில் விட்டுவிடு...!!!
உழைப்பு மேலோட்டம் என்றாலே ...
வெற்றி ஆழத்தில் தங்குமே...!!
உழைப்பு ஆழம் என்றாலே ..
வெற்றி மிதந்து வந்து நம்மைச் சேருமே ...
தொடக்கம் தொடர்ந்து வளரனும் ...
மகுடம்தானே சூடனும்...
எல்லா முடிவும் தொடக்கம்தான் ...
தொடக்கம் என்பது சிறப்புதான்...
வெற்றி தோல்வி பொருட்டல்ல ...
செயல்கள் தொடங்கி செய்திடு...
செம்மையாக வாழ்ந்திடு...
தொடக்கம் இல்லாமல் முடிவு இல்லை...
முடியும் மட்டும் செயலை தொடர்ந்து செய்திடு ...
உன் இலக்கின் வெற்றி பெறும் வரை என்பதே
இதன் பொருளாகுமே...
தொடக்கம் அனைத்திற்கும் அச்சாணி ..
வெற்றியை நல்கும் நல்வித்தே...
தொடங்க தயக்கம் கொள்ளாதே..
வாழ்வில் உயர மறுக்காதே ...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)