காதலின் கனவு!
- கவிஞர் பிஎஸ் முருகேசன்
கடிதங்கள் பரிமாற்றம்
காணாமல் போச்சுடா
காற்றலை பேச்சுதான்
கலக்கல் ஆச்சுடா
காதலன் காதலிக்கு
அதுவே உயிர் மூச்சுடா
கால நேரம்
கணக்கு இல்லே
காசைப் பத்தி
கவலையில்லை
பேச்சே பிரதானம்
மூச்சே மூலதனம்
சிரிப்பு வரும்
வெறுப்பு வரும்
சின்ன சின்ன
சண்டை வரும்
காரணமே இல்லாமல்
கண்டபடி கோபம் வரும்
இடையிடையே இடைவெளி
இதுவும் கொஞ்சம் தலைவலி
மனசும் மனசும்
மோதிக் கொள்ளும்
மறு நிமிசம்
மாறிக் கொள்ளும்
மோதலே சாதல் ஆகும்
காதலின் முன்னே
கோபமே அஞ்சும்
கொஞ்சுவதைப் பார்த்து
அப்பா அம்மா வந்தா
ஆகிடுமே வேர்த்து
அரசல் புரசலாக
கசியும் காதல்
ஊரே கேலி பண்ணும்
உறவுகளும் சேர்ந்துகொள்ளும்
எதிர்ப்புக்கு நடுவில்
இருதலை பாம்பாக
போராட்ட களமாய்
போகுமே காதல்
தீராத காதல்
திரும்புமா?
அலைபேசி காதல்
அலைபோல கரையுமா
காதலின் வாழ்க்கை
கனவா நனவா
காலத்தின் கையில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)