பார் போற்றும் பாரதி!
- கா.சா.ஷர்மிளா
இலக்குமி ஈன்றெடுத்த சொல்லின் செல்வனே...!
தமிழ் கடவுளின் பெயரைக் கொண்டவனே...!
இளம் வயதிலேயே கவி புனைந்தவனே...!
பாவலர் போற்றும் பாரதியே.. நீ
புதிய சிந்தனைகளின் நாயகனே.. நீ
பெண்களுக்கு புதுமையில் புது நெறி காட்டியவனே...!
முண்டாசு கவிஞன் மட்டும் கூறிடாது...!
உன்னை சிந்தனைகளின் ஏகலைவனானவனே...!
பன்முகத்தன்மை கொண்ட மீசைக்கார கவிஞனே...!
தொலைநோக்குப் பார்வை கொண்ட மகாகவியே நீ...!
வறுமையிலும் அகத்தில் மகிழ்ச்சியுடனே...!
வறட்சியிலும் முகத்தில் புன்சிறிப்புடனே...!
என்றும் மாறா அணிகலன் கொண்டவனே...!
பாப்பாவுக்கு பாட்டு பாடிய பாவலனே....!
அச்சமென்பது இம்மியளவு இல்லாது...!
பிரிட்டிஷருக்கு எதிராக வீர முழக்கமிட்டவனே..!
கவிக்கு காதலியாக கனவு கண்ணம்மாவையும்...!
இல்லறத்தில் மனைவியாக செல்லம்மாவையும் கொண்டவனே...!
நாடி நரம்பும் விடுதலை முறுக்கேறும் ..
உன் கவியை வாசித்தாலே..!
பாட்டுக்கு ஒரு பாரதி நீயே..!
கவிஞர்களுக்கு ஒரு போதிமரம் நீயே...!
கவி உலக அரசன் நீ...!
மதங்களுக்கு அப்பாற்பட்டது உன் கவியே..!
ஈடில்லா நிலைப்பெற்றது உன் கவியே...!
இன்றும் உன் போல் ஒருவன் பிறக்கவில்லை
இப்பூ உலகிலே...!
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)