கலாமின் உயர்ந்த கருத்துகள்!

Su.tha Arivalagan
Feb 04, 2026,11:13 AM IST

- ஜெனிட்டா ரீனா


மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒவ்வொரு வரியும் பொன் மொழிதான்.. அவர் சொல்லி விட்டுப் போயுள்ள வார்த்தைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றினாலே ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதிலிருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம்.


வெற்றி என்பது தோல்விகளுக்கிடையே தான் உள்ளது. எதைச் செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு,அதில் அதிகபட்ச ஆர்வத்தையும், சக்தியையும் வெளிப்படுத்த வேண்டும்.




சர்வ சக்தி கொண்ட எல்லைகள் தான் அவரவர்களின் வாழ்க்கைகளைத் தீர்மானிக்கின்றன. 


மதம் என்பது உயர்ந்தவர்களுக்கு நட்பினையும்,சிறு புத்தி கொண்டவர்களுக்குப் பகைமையினையும் உண்டாக்கும் கருவியாகும்.


புதுமைகளை உண்டாக்கும் எண்ணங்களுக்கு ஒரு தூண்டு சக்தியாக இருப்பது பிரார்த்தனையே.


மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரால் முழு வெற்றியை அடைய முடியாது.


நேர்மை- துணிவு-உண்மை இவைகளைக் கடைபிடிக்கும் கரங்களே அழகிய கரங்களாகும்.


கல்வி-திறமைகளை வலுப்படுத்திக் கொண்டால் அறிவாற்றல் நிலையான சொந்தமாகும்.


குறிக்கோளில் வெற்றி பெற வேண்டுமென்றால் இலட்சியத்தில் இம்மியும் விலகாமல் செயல்பட வேண்டும்.


ஈடுபாடு,பங்கேற்பு,பொறுப்புணர்வு இம்மூன்றும் செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.


வாழ்க்கையில் மகிழ்ச்சி,நிறைவு, வெற்றி எல்லாமே தேர்ந்தெடுப்பதின் முடிவுகளைப் பொறுத்ததே.


விற்பனை செய்ய முடியாத, பயன்படாத எதையும் தயாரிக்கக் கூடாது.


பள்ளிக்கூட வாழ்க்கை வாசிக்க,படிக்க கற்றுத்தருவ தோடு கவனிக்க கற்றுத் தர வேண்டும்.


இலக்கு நிர்ணயம்,ஆக்கப்பூர்வமான சிந்தனை,கற்பனைக் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கை இவை வாழ்க்கைக்கு அடிப்படையாகும்.


மகத்தானவர் காணும் மகத்தான கனவுகள் எப்போதுமே நனவாகின்றன.


நம்பிக்கை அதிகம் கொண்ட ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.


அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதற்கு எதிலும் ஆழமான ஈடுபாடு கொள்ள வேண்டும்.


தேவைகள், புதுப்பித்தல்,பரஸ்பரம் ஒருவரை ஒரூவர் சார்ந்திருத்தல்,இயல்பான தொடர் தன்மை இந்த உண்மைகளைத் துல்லியமாக,முழுமையாக அறிந்து கொண்டால், தொழில்நுட்பம் என்னும் நிர்வாகம் செழித்தோங்கும்.


குழந்தைகள் அதிகமாக கேள்விகளைக் கேட்பவர்கள்.


நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும். துன்பங்களுக்கும் துன்பம் தரவேண்டும்.


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)