கணிதத்தின் தலைமகன்!
- சிவ .ஆ.மலர்விழி ராஜா
பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு ராஜ்யத்தை காண வைத்து......
ராமானுஜ மேதை என
தேற்றங்களை தெளிய வைத்தாய்.....!
வறுமையின் பிடிக்கும்
பிடித்தவனாகி வாழ்வின்.....
துயரங்களை அனுபவித்தாய்.....!
வாழ்க்கை கணக்குகளில் ....
காலம் உன்னை கலங்க வைத்தாலும்......
நீ காணும் கனவுகளில் காலம் ......
உனக்கு கொடுத்த பரிசு.....
கணிதமேதை எனும் மகுடம் ......
தேற்றங்களை தெரிய வைத்தாய் .....!
பகா எண்களை பகுத்தறிந்து
ஹார்டின் கனவுக்கு விதை ஆனாய்.....!
நெஞ்சமெல்லாம் கணக்கு.....
நினைவெல்லாம்
கனவுகளாக வாழ்ந்தாய்....!
வாழ்க்கை கணக்கு......!
மனைவியின் அன்பை
மானசிகமாக அனுபவித்து......
மனம் உடைந்து
வாழ்வை முடிக்க துணிந்தாய்......!
வாழ்க்கை பயணத்தில்
வறுமையை கடந்து.....
திறமையை வளர்த்து
கணிதத்தின் தலைமகனாய்......
தரணியில் ஆள வந்தாய்......!
வாழ்க உனது புகழ்.......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)