மனிதன்
- க.யாஸ்மின் சிராஜூதீன்
தாயின் கருவறையில் சிசுவானோம்.....
பூமித் தாயின் கருவறையில்
சிதைவுறுவோம்.....
இடையிலே வானவில் போல
பல வண்ணம் பூசி பளிச்சென
பட்டாம்பூச்சியாய் பறக்கின்றோம்.....
பல வருடங்கள் ஒரு நொடி போல மாறும்
இயற்கை எய்த பின்னே......
வாழும் வரை அன்பாக, கருணையாக, பண்பும் பாசமும்
நிறைந்து நிறைகுடமாய்
இன்புற்று வாழ்வோம்.....
பெற்றவை அனைத்தும் உன்னுடையது ஆனால் இல்லை....
சுற்றமும் நட்பும் சூழ வாழ்ந்திடு ...
காலம் உயிர் போன்றது மீண்டும் பெற இயலாதது...
உயிருடன் இருக்கும் வரை ரசித்து வாழ்ந்திடு...
முதுமையில் அசைபோட...
வரலாற்றில் தடம் பதிக்க ...
தடம் மாறாமல் தடைகளைத் தகர்த்து ...
நாம் என்பதை மொழிந்து ....
வலம் வருவோம் வாழ்க்கை என்னும் பயணத்தில்!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)