கண்ணாடி

Su.tha Arivalagan
Jan 29, 2026,04:29 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி 

அகத்திற்கு முகமே கண்ணாடி 

மழலைக்கு சிரிப்பே  கண்ணாடி 

உறவினர்க்கு அன்பே கண்ணாடி 




இல்லறத்திற்கு பிள்ளைகளே கண்ணாடி 

வீட்டிற்கு  வாசலே கண்ணாடி 

வானிற்கு  கடலே  கண்ணாடி 

ஆசிரியர்க்கு மாணவர்களே கண்ணாடி 

மாணவர்க்கு  ஒழுக்கமே கண்ணாடி 

காற்றுக்கு வேகமே கண்ணாடி 

பாட்டுக்கு சொல்லே கண்ணாடி 

கவிதைக்கு  தலைப்பே  கண்ணாடி 

கட்டுரைக்கு முன்னுரையேகண்ணாடி 

கதைக்கு நாயகனே  கண்ணாடி,

விளையாட்டுக்கு குழுத்தலைவனே கண்ணாடி,                  

கண்ணாடி கண்ணாடி கண்ணாடி 

உன் வாழ்க்கை உனக்கு முன்னாடி 

முன்தலைமுறை தலைமுறைக்கு கண்ணாடி 

நேர்மை ஒன்றே நமக்கு கண்ணாடி


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)