இயற்கை!

Su.tha Arivalagan
Dec 26, 2025,03:51 PM IST

- வே. ஜெயந்தி


பசுமை மேடுகளில் பொற்கதிர் நனைந்து

வெளிவந்து நடக்கும் காலை ஒளி

மரமெல்லாம் தென்றல் இசையில் ஆடும்

மனமெல்லாம் பூமலர் வாசம் சேரும்


ஓர் ஓரத்தில் நதி நனைக்கும் கரை

மற்றொரு ஓரத்தில் பூஞ்சோலை சிரிக்கும்

மண்ணோட்டக் கிணற்றில் விழும் நீர்த்துளி

மணமொத்துப் பரவும் வானம் தொட்டுப் போகும்




பறவைகளின் சிரிப்பு போல் தூய்மை இசை

பூமியின் மௌனம் போல் ஆழமான அமைதி

அறிவும் உணர்வும் இணையும் அந்த தருணம்

அனைத்தையும் தொட்டுச் செல்லும் இயற்கையின் கவிதை


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)