Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

Maitreyi Niranjana
Jun 18, 2026,11:59 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


அறிவு என்பது கடன் வாங்கப்பட்டது.. All Knowledge is borrowed .. சேர்த்து வைக்கப்பட்ட களஞ்சியம்.. அது ஒரிஜினல் அல்ல.. நமது மனமும் அதில் இருக்கும் விஷயங்களும் வெளியில் இருந்து சேகரிக்கப்பட்டவையே..


மைண்ட் என்பதை தாண்டி ஒருவர் தன் உள்நிலையை அடையும் போது மட்டுமே ஒரிஜினல் புத்திசாலித்தனம் வெளிப்பட ஆரம்பிக்கிறது.. அது காப்பியடிக்கப்பட்டது அல்ல..


ஒரு சிறிய கதை..


காஷ்முஷ் மிகவும் படித்த ஒரு பெரிய மேதை.. அவர் ஒரு ஞானியிடம் சென்று பேச ஆரம்பிக்கிறார்..


மனம் என்பது பொய் இந்த உடலும் பொய்.. நல்லது என்பது இல்லை; கெட்டது என்பதும் இல்லை.. குரு என்பதும் பொய் மாணவன் என்பதும் பொய்.. கொடுக்கப்படுவது பொய் பெற்றுக் கொள்வதும் பொய்.. நாம் பார்ப்பதும் நாம் உணர்வதும் நிஜமல்ல.. என்று கூறுகிறார்..


உடனே அந்த ஞானி தனது பைப்பை எடுத்து புகை பிடித்துக் கொண்டே பக்கத்தில் இருக்கும் ஒரு தடியை எடுத்து அவருக்கு ஒரு அடி கொடுக்கிறார்.. இப்போது காஷ்முஷ் துள்ளிக்குதித்து கோபத்துடன் ஏன் என்னை அடித்தீர்கள் என்று கேட்கிறார்..




இப்போது ஞானி சொன்னார் இந்த தடியும் பொய்.. நான் உன்னை அடித்ததும் பொய் நீ அடி வாங்கியதும் பொய்.. இப்ப யாருக்கு கோபம் வந்தது நன்றாக யோசித்துப் பார் என்று சொன்னார்..


இதுதான் நாம் படித்து புரிந்து கொண்ட விஷயங்களை சேர்த்து வைப்பதனால் அதனால் உருவாகும் ஈகோவின் நிலை..


உண்மை என்பதை யாரும் நமக்கு கொடுத்து விட முடியாது.. அதனாலேயே உண்மை அழகானது.. ஜீசஸ் ஓ கிருஷ்ணாவோ புத்தரோ யாரும் நமக்கு கொடுக்க முடியாது.. ஏனென்றால் அது மார்க்கெட்டில் கிடைக்கும் ஒரு பொருள் அல்ல.. நாமே அதுவாகவே ஆனால் மட்டுமே உண்மை என்பது நமக்கு உண்மை..


மைண்ட் என்பது ஒரு கிளியை போன்றது.. அது ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களை திரும்ப மட்டுமே கூறும்..

கிளி என்றதும் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது..


ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை நாம் அறிவோம்.. அவர் ஒரு கிளி வைத்திருந்தார்.. அது காணாமல் போய்விட்டது.. நமது காஷ்முஷ் அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்தார்.. இருவரும் மாஸ்கோ வில் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்பளைண்ட் கொடுத்தனர்..


அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கிளி காணாமல் போனாலும் அது ஸ்டாலினுடையது என்பதால் கேஸ் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதால் கிளியை பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்..


அந்த கிளி பேசுமா என்று கேட்க.. காஷ்முஷ் ஆமாம் அது பேசும்.. பிறகு சற்று யோசித்து தயக்கத்துடன் சொன்னார் ஆனால் அது சொல்லும் விஷயங்கள் அதனுடைய சுய கருத்துக்கள் மட்டுமே எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார்..


கிளிக்கென்று சொந்த கருத்துக்கள் இருக்குமா என்ன? 


நாம் எவ்வளவு படித்து தெரிந்து அறிந்திருந்தாலும்.. இவை எல்லாமே கடன் வாங்கப்பட்டவையே என்று நமக்கே தெரியும் போது.. இதனால் ஒரு பயனும் இல்லை என்று நாம் ஆழமாக உணரும் போது அது தானே டிராப் ஆகிவிடும்.. எனக்குத் தெரியவில்லை என்பது ஒரு சொற்றொடராக இல்லாமல் ஒரு கதறலாக நமக்குள்ளே உணரும் போது..அதுதான் ஆரம்பம்.. 


இந்த சேர்த்து வைக்கப்பட்ட அறிவு இல்லாமல்.. ஈகோ வளர முடியாது.. அப்போது நாம் ஒரு மூங்கிலைப் போல் இருப்போம்.. காற்று எப்படி தடையில்லாமல் நுழைந்து செல்ல முடிகிறதோ அது போல் வாழ்க்கை ஆற்றல் நம் வழியே நடக்க ஆரம்பிக்கும்.. ஈகோ என்பது தான் பெரிய தடை.. Ego is the resistance .. Without Ego Life happens effortlessly and spontaneously..


நமது மூலமான அந்த ஒன்றுமில்லாத தன்மையை அடைவதற்கு இரு வழிகள் தான் ஒன்று தியானம்.. அது நம்மைச் சுற்றியும்  நமக்குள்ளேயும் ஒன்றும் இல்லாத தன்மையை அடையும் ( நமது மனத்தை தாண்டி செல்லும் .. Going Beyond the Mind ) வழியாகிறது.. புத்த மதமும் சென் மதமும் இந்த வழியை சேர்ந்தது..


மற்றொன்று முழுமையான அன்பு.. All Inclusive Love.. இதன் மூலமாகவும் ஒன்றுமில்லாத நிலையை அடைய முடியும்.. இது பக்தியின் மூலம் நிகழ்கிறது..


ஒன்றுமில்லாத நிலையும் முழுமையான அன்பும் ஒரே நிலை தான்..


நாம் தொடர்வோம்..