ஆழித்தேரின் அழகிய ஆற்றல்!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
பவனி வருகிறார் தியாகேசர் பவனி வருகிறார்.....
காலத்தை வென்று கண்முன்னே
அசைந்து வருகிறார்....!
அழகாய் வருவது தேர்
மட்டும் அல்ல...
பவனி வரும் அழகில்
தமிழர் பண்பாடும்
பக்தியும் கலாச்சார
ரசனையும்.....
பாரதத்தின் பெருமையுமே....!
ஆரூரா தியாகேசா....!
ஆரூரா தியாகேசா.....!
விண்ணதிரும் முழக்கத்துடன்
கண்ணெதிரே.....
எழுச்சி மிகு தோற்றத்தில்....
ஏகாந்த வடிவமென
இந்துக்களின்
நம்பிக்கையாய்
பவனி வருகிறார்.....!
ஆடி அசைந்து வரும் அழகிய தேரினில்...
அபயகரம் தந்து வீதி நால் வழியே....
விரும்பிய வண்ணம்
ஆரூரா தியாகேசா...
திருநாமம் திருவாரூர்
திருத்தலமும்....
விண்ணும் அதிர்ந்திடவே....
எட்டுத் திக்கும் இனிமை
சேர்க்க.... அழகான திரு நாமம்....!
வரலாற்று நிகழ்வது போல்....
ஆழித்தேரின் அழகும்
சுழன்று மகிழ்விக்கும் இத்தருணத்தில்.....
ஆயிரம் ஆண்டுகளாக
சைவத்தின் சக்தியாக
வலம்வரும்....
ஆழித்தேரின் அற்புத அழகு....!
கைலாயத்தில் காட்சி தரும் இறைவனின்
திருக்காட்சி..... !
திருவாரூரில் திவ்ய தரிசனம் திருத் தேரில்.....!
ஆண்டுகள் பல ஓடிய தேருக்கும் சோதனை.....!
பங்குனி உத்திரத்தில்
உச்சம் தொட்டுவிட.....
தமிழகத்தின் தனி பெரும் சின்னமது
அழிந்து விட...... !
அக்னி தேவன் விரும்பியதை பிடித்து
அணைத்துக் கொண்டான்.....!
தளர்ந்திடுமா சைவத்தை உயிரென
மதிக்கும் இந்துக்கள்
மனம்....?
தனியொரு மனிதனாக
தளராத மனங்கொண்டு....!
தியாகேஸ்வரரை
உயிருக்கும் அஞ்சாது....
தீயினின்று மீட்டெடுத்தாரே முத்தென்ற பெயர் கொண்ட பக்தனவன்....!
வரலாற்று சின்னமது
வாஞ்சையுடன் உருப்பெற்று.....
பக்தியுடன் கலாச்சாரம்
கம்பீரமாக சொல்கிறதே.....!
பாரதத்தின் பெருமை பெற்ற தமிழகத்தின்
திருவாரூரின்.....
திருத் தேரின் பெருமை வென்றே.... !
சோழ நாட்டின் தனவான்கள்
ஒன்றிணைந்து.....!
மீண்டும் உயிர் பெற்ற
திருத் தேரில்
தியாகேசர் பவனி வர....!
ஆரூரா தியாகேசா....!
ஆரூரா தியாகேசா....!
ஆழித்தேரின் வடம் பிடித்து...
ஆண்டவனின் திருநாமம்....
அகிலமெங்கும் ஒலித்திடவே....
விண்ணதிர முழங்கிடுவோம்....!
திருச்சிற்றம்பலம்...!
ஆரூரா தியாகேசா.....!
ஆரூரா தியாகேசா....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)