தங்க ஆரம் பூண்ட வெள்ளித் தாலம் உதய சூரியன்!
Aug 07, 2026,04:29 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
கவிஞர் சசிகலாவின் விஸ்வநாதனின் ஹைக்கூ கவிதைகள்.
(1)
தங்க ஆரம் பூண்ட
வெள்ளித் தாலம்
உதய சூரியன்
(2)
இருள் நீக்கும்
மலை முகட்டில்
சூரியன் உதயம்
(3)
நீல வானம்
வெண் சூரியன்
செங் கிரணங்கள்
(4)
பற்றி எரிகிறது
பச்சை புல்வெளி
சூரியன் எழுகை
(5)
நடக்க நடக்க
பாதை தெரிகிறது
பகலவன் ஒளி
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)