மாயவனின் அருளோசை!
Dec 18, 2025,10:11 AM IST
- சிவ .ஆ.மலர்விழி ராஜா
அழகான
மாதமிது
ஆண்டவனின்
நேரமிது
இதயத்தின்
வாசலிலே
இறைவனின்
காட்சி அது......
வெண் மேகம்
பனியாக
வீதியெங்கும்
மழையாக
சில்லென்ற
பூங்காற்று
சிலிர்க்க
வைத்து சென்றாலும்.....
மெல்லிய
பனி கூட
மேனியை
தொட்டாலும்........
வண்ண வண்ண
மலர்கோலம்
வாசல் தோறும்
மாக்கோலம்....
உள்ளத்தில்
கமலம் போல்.....
திருமாலின்
திருநாமம்
பரந்தாமன்
புகழ்மாலை
பாவையரின்
பாமாலை......!
அதிகாலை
வேளையிலே.....
ஆலயத்தின்
மணியோசை.....
ஆண்டவனின்
தோட்டத்திலே....
அழகான
குயிலோசை.....
ஆடும் மயில்
அழகினிலே.....
அள்ளி வரும்
பேராசை......
மாயவனின்
அருளோசை......