மரத்தின் குரல்!

Su.tha Arivalagan
Jan 23, 2026,03:28 PM IST

- ச. அகல்யா


ஏ புத்திசாலி மனிதனே!!! 

இத்தனை காலமும் அமைதியாக இருந்தேன் 

இனிமேல் அப்படி இருக்க மாட்டேன்

நான் உனக்கு கொடுத்த நன்மைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல

என் உச்சி முதல் வேர் வரை அனைத்தையும் பயன்படுத்திவிட்டு 

இன்னும் உனக்கு ஆசை தீரவில்லையா




அற்ப மனிதனே! 

இப்போது என்னை அழித்தால் 

இன்னும் வளம் பெறுவாய் என்று

என் முன் ரம்பத்துடன் நிற்கிறாயே அற்ப மனிதா! 

என்னை அழித்தால் 

உன் சந்ததி வாழ்வதே கேள்விக் குறிதான்? 


அப்படி இருக்க 

உன் சந்ததிக்காக உழைக்கிறேன் என்று கூறி என் முன் நிற்கிறாயே

நீ புத்திசாலியா!!


விதைக்கத் தெரியாத உனக்கு வெட்ட மட்டும் எப்படித் தெரிந்தது?


நான் சுவாசித்த நஞ்சை இனி உன் பிள்ளைகள் சுவாசிக்கட்டும்! 

நான் தந்த நிழலை இனி நீ நெருப்பில் தேடட்டும்!


உன் கோடரி காம்புகள் என் கிளைகள்தான் என்பதை மறந்துவிட்டாயே...

என்னைச் சாய்க்க நீ வீசும் ஒவ்வொரு அடியும் 

உன் சுடுகாட்டிற்கான அஸ்திவாரம் என்பதை வீழும் போது சொல்கிறேன்!


முடிவு எனக்கல்ல... மூச்சற்றுப் போகப்போகும் உனக்குத்தான்!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)