பூவின் மதிப்பு
- கவி நிலவு சுமதி சிவக்குமார்
சின்னஞ்சிறு பூவிது
சிங்காரமாய் சிரித்தது
செல்வமகளாய் பிறந்தது வீட்டில்
செல்லமாய் வளர்ந்தது
கண்ணில் காணுமெல்லாம்
கையில் வந்தது
மாலையில் மொட்டாகி
காலையில் மலரும்
மலர்களின் சரமோ
மங்கையிவள் கரமோ
தொட்டு மகிழ்ந்து
தொங்கவிட்டு சென்றது
முன்புறக் கூந்தலில்
முழுநீளம் ஆடியது
அன்ன நடையில்
சின்ன இடையில் அழகாய்
அத்தனைப் பிரியம்
மணமாகிய போது
மணமான மல்லிகைதன்
மனதை மயக்கவே
மாமனைக் கேட்டாள்
காலையில் மலர்ந்து
மாலையில் மடியும்
பூக்களின் விலையோ
பொன்விலை தானடி
ஏக்கமும் இதற்கு
இத்தனையேனடி என்றான்
பூக்களைச் சூடிட
பூவைக்கு ஆசையோ ஆசை
கட்டியக் கணவன்
காட்டிற்குப் போனபின்
பூக்களின் மதிப்பு
குறைந்தாலென்ன கூடினாலென்ன
கூந்தலில் சூடிட
கூட்டமும் விடுமோ
பூவையின் மதிப்போ
பூமகனே உனது
ஊனுடல் உயிரில்
உண்மையில் உள்ளதடா !!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)