தென்றலே மெல்ல வீசு
Jan 02, 2026,01:49 PM IST
- அ.சுசீலா
தென்றலே மெல்ல வீசு
மனம் உன்னை நாடி ஏங்கும்
மரங்கள் தன்னால் அசையும் உன்னாலே
கவிதைகள் பிறக்கும் நீ வந்தாலே
மனம் குளிர பாடல்கள் பொங்கும்
பாடல்களாக புதிய வரிகள் பிறக்கும்
தென்றல் வந்தால் சொர்க்கம் தானே
மனம் மகிழ கொஞ்சும் பூக்களே
உன்னைத் தேடி மனம் கெஞ்சும்
மாலை நேர மயக்கம் அதுவே
தென்றல் உன்னால் என்றும் தானே
காத்திருக்கும் அதோ அந்த பசுஞ்சோலை
அனலாய் நெஞ்சம் கொதிக்க
காய்ந்த சருகாய் உதிர
மெல்லிய வருடல் செய்தாயே!
குளிர்ந்ததே நெஞ்சம் உன்னாலே!
செடிகள் தன்னால் அசைந்தாட
மரத்தில் கிளிகள் கொஞ்சிட
தினம் தினம் என்னுடன் பேசு.
(அ. சுசீலா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்)