என்னை உன்னில் சேர்ப்பதே உன் முதல் பொறுப்பு...!
Sep 01, 2025,10:40 AM IST
- தீபா ராமானுஜம்
என்னுயிரே!!
நான் ஒரு புதுக்கவிதை;
என்னை மரபுக்கவிதை யாக்குவது உன் பொறுப்பு...
நான் ஒரு புதுமலர்;
என்னை பூஜையில் சேர்ப்பது உன் பொறுப்பு...
நான் ஒரு மூங்கில்;
என்னை புல்லாங்குழலாக்குவது உன் பொறுப்பு...
நான் ஒரு தீப்பொறி;
என்னை தீபமாக்குவது உன் பொறுப்பு...
நான் ஒரு காற்று;
என்னை தென்றலாக்குவது உன் பொறுப்பு...
நான் ஒரு ஓவியம்;
எனக்கு வண்ணம் தீட்டுவது உன் பொறுப்பு...
நான் ஒரு புள்ளி;
என்னை கோலமாக்குவது உன் பொறுப்பு...
நான் ஒரு உயிர்;
என்னை உன்னில் சேர்ப்பதே உன் முதல் பொறுப்பு...