கண்ணன் உண்டு நம்முடனே.. கண்ணீர் எதற்குக் கண்களிலே!
- கோ. அருள்செல்வி இராஜாராம்
கறவைகளுக்கு பஞ்சமில்லை
அருகில் யமுனைக்கு ஆழமில்லை
அமுதன் சீனுவுக்கு
அலமேலுமங்கை கோஸ்டி கோலாகலமே
கோயிலடியிலே நல்கோ
நங்கையின் அழகினிலே!
கண்ணன் உண்டு நம்முடனே
கண்ணீர் எதற்குக் கண்களிலே
கதிரும் மதியும் மறைந்திடலாம்
காரிருள் சூழந்து மூடிடலாம்
கலக்கம் எதற்கு மனதினிலே
கண்ணனும் காக்க கண்மணியே
கலந்து பிரியும் சொந்தங்களே
கடைசி வரைக்கும் பாரினிலே
கருதிக் காப்பவன் கண்ணனுமே
கதியெனக் காத்திடும் கழலடியே
கதியருளில் கதிரவனின்
உலகளந்த உத்தமனின் உதயம்
அழகு உள்ளம் குளிர அமுதநேரமழகு
அம்பாரி யானையை ரசிப்பார் உண்டு
அந்தியில் கருடன் வியப்பார் உண்டு
அக்கார வடிசலைக் கேட்பார் உண்டு
அரங்கன் அள்ளிக் கொடுப்பதும் உண்டு
அசையும் அழகினில் மயங்குவார் உண்டு
அரியென கஜமென உரைப்பார் உண்டு
அத்தனை உற்சவம் தொழுவார் உண்டு
அரங்கன் மௌனமாய் கிடப்பதும் உண்டு
மணிகளே!
நான் களவாடப் போகிறேன்!
நான் வெண்ணெய் அமுது செய்கையில்
அமைதியாய் இருங்கள்!
நீங்கள் ஒலித்து
என்னைக் காட்டிக் கொடுக்காதீர்கள்!!
கண்ணன்
தன் திருவாயில் வெண்ணெயை
வைத்ததுதான் ,
மணிகள் ஒலிக்கத் தொடங்கின!
இப்படிச் செய்யலாமா?
கண்ணா!
நாங்கள் என்ன செய்வோம்?
உனக்கு நைவேத்தியம் செய்யும்போது
ஒலிக்கத்தானே நாங்கள்!!
மனத்துக்கினிய மாதவனே
உள்ளமுகந்த உத்தமனே
கண்கள் கவர்ந்த கள்வனே
வெண்ணெய் திருடும் வாமனனே
அடியோங்கள் உள்ளம் திருடிய திங்கள் முகத்தோனே
திவ்யமாக அனுபவிபோம் ஆராவமுதனையே
கைங்கர்யம் வேண்டி வந்தோம் வேங்கடவனே
கைமுதலற்று வந்தோம் வாசுதேவனே
உன் உள்ளம் உகக்கவே
காமம் கழித்து நின் கழலடியிலுய்யவே காத்து நிற்கிறோம்
நிமலனே நீள்மதிளரங்கத்தம்மானே
திருவின் ஹரி
திருவரங்கஹரி
திருநாளோ பூபதிஹரி
திகழும் நமபெருமால் ஹரி
திருவரங்கநாயகி ஹரி
திருப்பாவையின் ஹரி
தினம்தினம் ஹரியென்றிட
தீவிணை மாய்க்கும் ஹரி
திரூவேங்கட ஹரி
குருவாயூர் ஹரி
குருரம்மா ஹரி
பூந்தானம் ஹரி
பட்டத்ரி ஹரி
நடாதூர் ஹரி
உடையவரின் ஹரி
அனந்தாழ்வானின் ஹரி
பெரிய ஜீயர் ஹரி
பெருவீடு தரும் ஹரி
உலகளந்த தாடாளனே
தவிட்டுபானை தாடாளா
தயிர்மோர் குடமுருட்டிய குடந்தையனே
குறலுருவான குருவாயூரானே
வழித்துணை திருமோகூரானே
அம்மாயென அன்பாக அழைத்த கச்சியூரானே
கீரைக்கு ஆசைப்பட்ட ஜீயர்புரத்தாறே
அடியோங்கள் உகக்கும் உத்தமனே
பல்லாண்டு பல்லாண்டு
தேவராஜன் திருவடி பணிந்திடு மனமே
வரதராஜன் திருவடி பணிந்திடு மனமே
சத்திய சேத்திரமே சத்திய வரதனே
திருவடி தினம் பணிந்திடு மனமே
காஞ்சியம்பதி பேரருளாளன்
பற்றுகள் நீக்கி பக்தியை காட்டும் '
பரந்தாமன் திருவடி பணிந்திடு மனமே
மதுரமங்கள நாயகனே
உடையவரின் உறவே
எம்பார் என்கிற கோவிந்தரே
ஆசார்ய அபிமான அன்பரே
சந்யாசத்திலும் விடாத உறவென
உடையவரின் ஏற்றமே
அடியோங்களின் உதாரண புருஷரே
பல்லாண்டு பல்லாண்டு
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)