அன்னைக்கு நிகர் ஏதுமில்லை!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
அன்னைக்கு நிகர் அகிலத்தில் ஏதுமில்லை.!
அவள் தியாகத்தின் எல்லைக்கு, முடிவே இல்லை.!
அவள் தன் உயிர் கொடுத்து , நம் உயிர் தந்தவள் .!
அவள் தன் உதிரத்தை ,உணவாக்கி தந்தவள்..!
உலகின் மிக சுகமான வீடு ,அவளின் கருவறை மட்டுமே..!
உலகின் மிகப் பெரிய சக்தி ,அவளின் அன்பு மட்டுமே..!
அன்னையின் முகமே அனைவரும் காணும் முதல் ஓவியம் ..!
அன்னையின் குரலே அனைவரும் கேட்கும் முதல் இசை ..!
உலகின் எந்த பரிசும், அவளின் முத்தத்திற்கு ஈடாகுமா?
உலகில் எந்த மெத்தையும் ,அன்னை மடிக்கு ஈடாகுமா?
அவள் உடுத்திய அந்த பருத்தி சேலையில் ,
கட்டிய தொட்டிலுக்கு ,எந்த மாளிகையும் நிகராகுமா.!
அவள் சேலையை முகர்ந்து பார்த்த அந்த நொடியில் ,
அனைத்து கவலைகளும் , பறந்து போகும்.!
அவள் இவ்வுலகில் இல்லாத போது ,ஒரே ஆறுதல் ,
அவள் விட்டுச் சென்ற அவளின் சேலை மட்டுமே.!
அவள் நமக்காக தன்னைத் தொலைத்தவள்.
அவள் வயது முதிர்ந்த காலத்தில் , அவளுக்காக..!
உங்கள் நேரத்தை கொஞ்சம் தொலையுங்கள்.
உங்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் .
அவள் போன பின் அவளுக்கு மலர் மாலை வேண்டாம்.!
அவள் இருக்கும் காலத்தே, அன்பு மழை பொழியுங்கள்.!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)