உண்மையான நேசம் இருந்தால்.. வார்த்தைகள் தேவை இல்லை.. நினைவுகள் கூட பேசும்!
- டி. கலைமணி
வாழ்க்கையில் நாம் சிறந்து விளங்கத் தேவையான சில சிந்தனை துளிகள்!
உண்மையான நேசம் இருந்தால்
வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட பேசும்!
திறமை என்பது
கடவுளால்
கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொண்டது.
எச்சரிக்கையுடன் இருங்கள்.
சிக்கனமும், சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை
உயர்த்தும்
இரு கருவிகள்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதே
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
வழி இருப்பது உண்மை.
தேடுவது நம் திறமை!
நாம் தேடி
செல்வோரை விட
நம்மை தேடி வருவோர் மீது அதிகம்
அன்பையும்
அக்கறையும்
செலுத்துங்கள் வாழ்க்கை இனிக்கும் !
பிறப்பால்
கிடைத்த
உறவுகள்
அதிர்ஷ்டம் என்றால்
அன்பால் இனைந்த
நட்புகள்
பொக்கிஷம்.
என் மனம் வலிகளை சுமக்கிறது, என் புத்தி குழப்பங்களை சுமக்கிறது. இதற்கு இடையில் தான் நடக்கிறது என் வாழ்க்கை
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க இயலாது ஆனால், உங்கள் தலையில்
கூடு கட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்.
மெளனத்தை விட
சரியான தண்டனை இருக்க முடியாது
நம் எதிரிக்கும், நம்மை அலட்சியம் செய்யும் உறவுகளுக்கும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)