எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
சென்னை: 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை. எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை. பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்.
சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன் தான் வீரன். வெற்றியடைந்தால் இருப்பேன். தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை தனம். எங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து பயம். எங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து வீரம். அரசியல் போராட்டத்தில் தோல்வி அஞ்சாமல் முன்னேறுவதே உண்மையான வீரம். வறுமை, அறியாமை, மறதி ஆகியவை அரசியல்வாதிகளுக்கு முதலீடாக தற்போது மாறிவிட்டது.
அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்? 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை. எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை. எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது.
கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு. தற்போது நடக்கும் கூட்டணி மாற்றங்கள் கொள்கை அடிப்படையில் அல்ல, சுயநலத்துக்காக நடக்கின்றன. மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அவசியம், பரந்தூரில் விமான நிலையம் அநாவசியம். மீனம்பாக்கத்தில் ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை மேம்படுத்தினால் போதும். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தேவையற்றது. கட்சி மாறுபவர்களைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்பதில்லை. வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது. இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது.
புதிய ஆட்சி வந்தால் கல்வியின் தரம் உயருமா? அனைத்தும் இலவசம் என்றால் எப்படி? ஊழல் அற்ற ஆட்சி வருமா? ஆணுக்கும், பெண்ணுக்கும் பஸ் இலவசம் என்றால், ஓட்டுநர், நடத்துனருக்கு சம்பளம் எப்படி கொடுப்பீர்கள்?. திமுக அரசின் இலவச திட்டங்கள் நீண்டகாலத்தில் நிலைத்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.