திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா.. முருக பக்தர்களுக்கு கொண்டாட்டம்!

Swarnalakshmi
Aug 31, 2026,10:27 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி திங்கட்கிழமை யான இன்று ஆவணி 14-ம் நாள்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.


12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் ஆவணி திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 4:30 மணிக்கு வடக்கு ரத வீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. யானை மீது வைத்து கொடிபட்ட வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் உதய மார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து காலை 05: 15 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி, பின்னர் இரவு ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில்  ஒன்பது சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.


ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்:




04.09.2026 ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேல கோவிலில் இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சுவாமியும்,அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.


05.09.2026 காலை 


கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல்.


06.09.2026 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் காலை 9:00 மணிக்கு கோவிலிலிருந்து  சுவாமி சண்முகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில்  பிள்ளையன்   கட்டளை மண்டபத்தை சேருதல் நடைபெறுகிறது. அங்கு மாலையில் சுவாமி- அம்பாள் அபிஷேகம், அலங்காரம், திபாராதனை நடைபெறும்.


மாலை 4 :00மணிக்கு சுவாமி வள்ளி- தெய்வானையுடன்  தங்க சப்பரத்தில்  சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 


திருவிழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் :

 

8 ஆம் திருநாள்:


செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில்  வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல் 12:00 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்வார்.


சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பத்தாம் திருநாளான வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறும்.


திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுப்பிரமணிய சுவாமி அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.