எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

Su.tha Arivalagan
Jan 18, 2026,11:27 AM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


வீர தீர விளையாட்டு !!!!

விவேகம் நிறைந்த விளையாட்டு !!!

ஒழுக்கம் வளர்க்கும் விளையாட்டு !!!!

ஒற்றுமை போற்றும் விளையாட்டு !!!!

அறம் செறிந்த விளையாட்டு !!!!

மறம் நிறைந்த விளையாட்டு !!!!

பல்லாங்குழி பாண்டி ஐந்தாங்கல்!!!

இவை குலவையர் கொஞ்சிடும் விளையாட்டு 

பம்பரம் சடுகுடு

கோலிக்குண்டு 

இவை சிறுவர்கள் 

விரும்பிடும் விளையாட்டு

கில்லி குஸ்தி கிளியாந்தட்டு!!!!




காளையர் கலக்கும் 

ஜல்லிக்கட்டு !!!!

உறியடி சிலம்பம் 

வழுக்குமரம்

வலிமை வீரம் கலாச்சாரம்!!! 

இணைந்ததே எங்கள் விளையாட்டு !!!!

வீரம் போற்றும்

விளையாட்டு !!!!

எங்கள் வீர தீர விளையாட்டு! 

இது விவேகம் நிறைந்த விளையாட்டு!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).