உலகிலேயே மிக நீளமான வார்த்தை எது தெரியுமா.. நாக்கும், வாயும் பத்திரம் பாஸ்!
- அ.கோகிலா தேவி
சென்னை: உலகிலேயே மிக நீளமான ஆங்கில வார்த்தை எது தெரியுமா.. அது ஒரு நோயின் பெயர்தான். அதுதான் உலகிலேயே மிகவும் நீளமான ஆங்கில வார்த்தையாம்.
உலகத்திலேயே மிகவும் நீளமான ஆறு தெரியும்.. வார்த்தை தெரியுமா.. தெரிஞ்சுக்குவோம் வாங்க.. ஆனால் ஒரு வார்த்தை இல்லைங்க. நிறைய இருக்கு இது போல.
அதில் முதலிடத்தில் இருப்பது இந்தப் பெயர்தான். ஆங்கிலத்தில் நுரையீரலுடன் தொடர்புடைய ஒரு நோயின் பெயர் தான் மிக நீளமானது. அது என்ன தெரியுமா.. உச்சரிப்பதற்கு முன்பு வாயும், நாக்கும் பத்திரம் பாஸ்.. அதுக்கு ஏதாவது ஆச்சுன்னா கம்பெனி பொறுப்பு கிடையாது.. சரியா.. இப்பப் படிங்க அதை..
'Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis'.. இதுதாங்க உலகிலேயே மிகவும் நீளமான ஆங்கில வார்த்தை. மொத்தம் 45 எழுத்துக்கள் இதில் உள்ளன. 1935ம் ஆண்டுதான் இந்தப் பெயரை உருவாக்கினார்களாம். சரி இதை ஒவ்வொரு முறையும் சொன்னால் டாக்டர் வாய்க்கே வைத்தியம் பார்க்க வேண்டி வருமே என்பதால் இதை சுருக்கி செல்லமாக சிலிகோஸிஸ் silicosis என்று சொல்கிறார்கள்.
இதைபோல இன்னொரு பெரிய வார்த்தையும் உண்டு. அது Hippopotomonstrosesquippedaliophobia. இதில் 36 எழுத்துக்கள் உள்ளன. இந்த பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா.. நீண்ட வார்த்தைகளின் பெயரால் ஏற்படும் அச்சம் என்பதாகும். ஏன்டா, அதான் அவனே ஏற்கனவே பயந்து போயிருக்கானே.. அந்த பயத்துக்குப் பெயரையே இவ்வளவு பயங்கரமாவாடா வைப்பீங்க.. என்ன பண்றது.. வச்சுட்டாய்ங்களே!
அதேபோல Supercalifragilisticexpialidocious (34 எழுதுத்துக்கள்), Antidisestablishmentarianism (28 எழுத்துக்கள்), Floccinaucinihilipilification (29 எழுத்துக்கள்) என இந்தப் பட்டியல் கொஞ்சம் நீளமாத்தான் இருக்கு..
நமக்கு இப்பவே நாக்கு தள்ளுது.. மற்றவற்றை நாளைக்குப் பாத்துக்கலாம்.. வாங்க ஓடீருவோம்!
(அ.கோகிலாதேவி தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)