"மூலிகைகளின் அரசி" .. தூய்மையான துளசி.. மருந்து மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட!
ஸ்வர்ணலட்சுமி
பாரம்பரியமாக பயன்படுத்துகிற துளசி இலைகள் நம் வாழ்வில் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உறுதுணையாக இருக்கிறது. "மூலிகைகளின் அரசி" என்று அழைக்கப்படுகிற துளசியை பற்றிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கோவில்களில் முக்கியமாக பெருமாள் கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் துளசி இலைகள் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தமாக கொடுக்கப்படுகிறது. அற்புத ஆற்றல் வாய்ந்த துளசியை வீட்டுத் தோட்டங்களிலும், துளசி மாடங்களிலும் வைத்து வழிபடுவது சிறப்பு.
துளசியின் வகைகள்: துளசி பல வகைகள் உண்டு. வெண்துளசி, கருந்துளசி, நாயத்துளசி, செந்துளசி இனிப்பு துளசி, நற்றுளசி என பலவகை துளசிகள் உண்டு.
துளசி இலைகளினால் இவ்வளவு நன்மைகளா....
*சளி ,இருமல் ,காய்ச்சல் துளசி மருந்தாகிறது
சளிக்கு துளசி இலை நல்ல மருந்து. துளசி சாறுடன் தேன் கலந்து குடித்தால் சளி, இருமல், காய்ச்சல் நிவாரணம் பெறும். சளி தொல்லை காண நிவாரணம் துளசி இலைக்கு உண்டு. உடலில் வெப்பத்தை உண்டாக்கி நெஞ்சு சளியை அகற்றுவதுடன் உடலில் உள் வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. இருமலை கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
ஆயுர்வேத மருத்துவ குணங்கள் கொண்ட துளசி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் நார் சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன .இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
துளசி இலைகளில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரை அளவு கட்டுப்படும்.
துளசியை பற்றிய பழமொழி இருக்கிறது அது யாதெனில் "துளசிக்கு வாசமும் முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்" துளசி அத்தனை வாசனை உள்ள இலை ஆகும்.
எலுமிச்சைச் சாறுடன் துளசிச்சாறு கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும்.
துளசி இலைகளை கழுவி விட்டு மென்று சாப்பிட்டு அதன் சாறு விழுங்கினால் வாய் குடல் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
*துளசி இலைகள் எலுமிச்சை சாறு உடன் அரைத்து தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். இதனால் சொரி ,சிரங்கு போன்றவை குணமாகும்.
துளசி இலையுடன் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வருவதனால் பருக்கள் மறையும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
பாட்டி காலங்களில் கூறப்படுவது யாதெனில் என்றும் இளமையுடன் இருக்க துளசி நீர் சுத்தமான செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடி அளவு துளசியை போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து அந்த நீரை குடிக்க எந்த நோயும் அண்டாது.
இன்றும் இந்த நல்ல யோசனையை நாம் பின்பற்றி வரலாம். மேலும் தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. பார்வை குறைபாடு நீங்கும்.
இதனால்தானோ என்னவோ பெருமாள் கோவில்களில் கடவுளுக்கு துளசி மாலைகள் துளசி இலைகள் சாற்றப்பட்டு இது ஒரு அற்புதமான மூலிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.
இப்பொழுது கொரோனா மீண்டும் பரவுகிறது என்று செய்தி பரவலாக வருகிறது. எனவே இது போன்ற மருத்துவ குணம் நிறைந்த இலைகளை பயன்படுத்தி நல்வாழ்வு வாழ்வோம் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.