திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Dec 29, 2025,05:49 PM IST
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை அதிகாலை திருப்பதி தேவஸ்தானத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு ஆன்லைனில் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்று வரை டோக்கன் வழங்கப்பட்ட 1.80 லட்சம் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மீண்டும் டிசம்பர் எட்டாம் தேதி முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படும். மகாவிஷ்ணுவை வழிபடும் முக்கிய நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் முக்கிய நிகழ்வாக விஷ்ணு ஆலயங்களில் காலை 4.30 -- 6.00 பிரம்ம முகூர்த்தத்தில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறந்து இருப்பதாக ஒரு ஐதீகம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இது மிக விமர்சையாக கொண்டாடப்படும் இன்று ரங்கநாதர் ரத்ன அங்கியில் ஊர்வலம் வந்து சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.சொர்க்கவாசல் வாசல் வழியாக கோயிலின் உள்ளே சென்று இறைவனை தரிசிப்பவர்களுக்கு அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது.