சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 17, 2026,02:37 PM IST

அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். பிறகு முக்கியமான 2 அறிவிப்புக்களை அவர் வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட 2 அறிவிப்புகள் :




1. ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை

2. சிறந்த மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணி வழங்கப்படும்.


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அலங்காநல்லூரில் வைத்து முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் மிக முக்கியமானதாக கருதுப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை இந்த அறிவிப்புக்கள் நிச்சயம் கவரும். மாடு வீரர்களுக்கு இது ஊக்குவிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.