தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Su.tha Arivalagan
Feb 23, 2026,05:20 PM IST

சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) நிறைவடைந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எஸ்ஐஆர்க்கு முன்னர் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 5.43 கோடியாகக் குறைந்துள்ளது. அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யம், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று  மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.




உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியல் வைக்கப்படும். 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டும் விவரம் அறியலாம். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெர் உள்ளதா? என்பதை voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் voter helpline app மூலமாக சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறுதிப் பட்டியல் இன்று வெளியானாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தவறியவர்கள் தொடர் திருத்தப் பணி (Continuous Revision) மூலம் தேர்தலுக்கு முன்பாக விண்ணப்பிக்க இன்னும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.