ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

Su.tha Arivalagan
Aug 08, 2025,10:25 AM IST

சென்னை : ஆகஸ்ட் 12ம் தேதி தாயுமானவர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.70 தயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாறுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 




ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொது விநியோக துறையின் சார்பில் தாயுமானவர் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பலர் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.


தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்கள் பலவும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.