நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விஜய்யின் பேச்சிற்கு பதில் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தவெக கட்சி தயாரகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பிரச்சாரப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிமை தொடங்கினார். தனது முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார்.
இன்று நாகையில் தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதன்படி இன்று நாகை மாவட்டம் சென்ற தவெக தலைவர் விஜய், நேரடியாகவே முதல்வரிடம் கேட்கிறேன்.. என்னை மிரட்டிப் பார்க்கறீங்களா.. அதுக்கு நான் ஆள் இல்லை. அதுக்கு நாங்க ஆள் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாகப்பட்டனத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம் என்று தெரிவித்திருந்தார் தவெக தலைவர் விஜய். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய்யின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது என்றும், நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.