அமைச்சர் ஆதவ் அர்ஜூவாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

Su.tha Arivalagan
Nov 16, 2026,02:37 PM IST

சென்னை : அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உடனான 14 ஆண்டு கால திருமண உறவில் இருந்து பிரிவதாக அவரது மனைவியும் பிரபல லாட்டரி அதிபர் மாண்டியாகோ மார்ட்டினின் மகளுமான டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார்.


டெய்சி மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "14 ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கையிங் அங்கம் வகித்த பிறகு, நண்பர்களாக வாழ்க்கை துணைகளாக மற்றும் பெற்றோர்களாக வாழ்க்கையின் வெவ்வேறு அத்தியாயங்களைக் கடந்து செல்லும் இந்த பயணம், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.


இன்று நானும் ஆதவ் அர்ஜூனாவும் தம்பதியராகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் செல்ல பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தானும் ஆதவும் இணைந்து குழந்தையை வளர்ப்பதிலும் தங்கள் குழந்தையின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் உறுதியாக இருப்பதாக டெய்சி கூறி உள்ளார். 




இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயமாக இருந்தாலும் குழந்தையை இணைந்து வளர்ப்பதிவும், அதன் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் உள்ள எங்கள் அர்ப்பணிப்பு எப்போதுமே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆதவ் மீது தனக்கு தொடர்ந்து மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரது எதிர்கால முயற்சிகளில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாகவும் டெய்சி குறிப்பிட்டுள்ளார். பிரிவை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழகத்தின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா, தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஆதவ் அர்ஜூனாவின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி, குழந்தை கலந்து கொண்டதால் அவர்கள் மீண்டும் இணைந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் தனது கணவரை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.