12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 02, 2025... இன்று வெற்றிகளை குவிக்கும் ராசிகள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், கார்த்திகை 16 ம் தேதி செவ்வாய்கிழமை
பிரதோஷம். பரணி தீபம். இன்று பகல் 12.29 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.23 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, இன்று குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டினர் மூலம் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் செழித்து, கடந்த ஆண்டை விட அதிக லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த நற்செய்திகள் வந்து சேரும். தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கரும் பச்சை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். தம்பதியரின் முயற்சிகள் வெற்றி பெறும். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, பிதுர்வழி சொத்து பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பார்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படலாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே செய்வார்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கும். பால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வீட்டை மாற்றும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதிய வியாபார திட்டங்களை தீட்டுவார்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். பய உணர்வு தோன்றலாம். ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வார்கள். வெளி நபர்களிடம் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வான் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, உறவினர்கள் தங்கள் தவறை உணர்ந்து நலம் விசாரிப்பார்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். செயல்களில் உற்சாகம் வெளிப்படும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவார்கள். சுற்றுலாவைத் தள்ளிப்போடுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, எதிர்பாராத சந்திப்பு நிகழும். நல்ல வரன்கள் கிடைக்கும். காதலர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. தம்பதியரிடையே சமரசம் ஏற்படும். குடும்பத்தில் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் இருந்த முடக்கம் நீங்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தேக பலம் உண்டாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. காதலர்கள் பொறுப்புணர்வார்கள். வீட்டில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படலாம். உடல் நலம் சீராகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, இணையதளம் மூலம் வேலைகளை முடிப்பார்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். சுப காரியங்கள் தாமதமாகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் மந்தநிலை தோன்றும். உடன்பிறந்தவர்களால் பயனடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, அரசியலில் நாட்டம் கூடும். செலவுகள் அதிகரிக்கும். காய்கறி வியாபாரிகள் பயனடைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருக்க வேண்டும். தம்பதியரிடையே வாக்குவாதங்கள் வந்து போகும். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். நண்பர்கள் கைகொடுப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, மனைவி வழியில் ஆதரவு பெருகும். திருமணப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கத்து வீட்டார் உதவுவார்கள். பண வரவு தாமதப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.