12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2025... இன்று கார்த்திகை தீபத் திருநாள்

Su.tha Arivalagan
Dec 03, 2025,09:41 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 17 ம் தேதி புதன்கிழமை

திருக்கார்த்திகை. கிருத்திகை. கரிநாள். சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம். இன்று காலை 10.13 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.47 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று மாலை 04.47 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யோகாவில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதலர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நல்ல வரன் அமையும். அதிர்ஷ்ட நிறம் கிரே.


ரிஷபம் - பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். சக ஊழியர்கள் மதிப்பார்கள். நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தம்பதியரிடையே நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். உடல் நலம் சீராக இருக்கும். பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள். சில சமயங்களில் ஞாபக மறதி வந்து போகும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாள வேண்டும். ஒட்டுமொத்தமாக, புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இன்று தங்கை வழியில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலை செய்பவர்கள் மீது கவனம் தேவை. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பங்குச் சந்தை மூலம் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சைனஸ் தொந்தரவு நீங்கும். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவீர்கள். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. பல காரியங்களில் தடைகள் ஏற்படலாம் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்வார்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு வேலைகளை முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் பலம் பெறும். அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். வாயுத் தொந்தரவு வந்து போகும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசியலில் இருப்பவர்கள் மேடைப் பேச்சுகளில் கவனம் தேவை. புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீர் பயணங்களால் லாபம் அதிகமாக இருக்கும். நண்பர்களால் அலைச்சலும், செலவுகளும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. அதற்கேற்ப செலவுகளும் வந்து போகும். சிக்கனமாக இருப்பது நல்லது. வேற்று மதத்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தூக்கமின்மை வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இன்று சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மனைவி வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலர் அண்டை மாநிலம் அல்லது வெளிநாடு சென்று வருவார்கள். வாகனத்தை இயக்கும் முன் அதன் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதற்கான முயற்சிகள் இன்று தொடங்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நீங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் பிறக்கும். வீண் பெருமைக்காக உங்கள் சேமிப்புகளைக் கரைத்துக் கொள்ளாதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். சளித் தொந்தரவு நீங்கும். அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மீனம் - மீன ராசிக்காரர்கள் இன்று பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசாங்க விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். திடீர் யோகமும், பணவரவும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட நிறம் நீலம்.