12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது

Su.tha Arivalagan
Dec 18, 2025,11:22 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், மார்கழி 03ம் தேதி வியாழக்கிழமை

மாத சிவராத்திரி. இன்று காலை 03.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 09.34 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. இறைவனை வழிபடுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடல் நலத்திலும் கவனம் தேவைப்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே ஆகும்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவார்கள். பெண்களுக்கு மதிப்பு கூடும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசரத் தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பார்கள். ஆடல், பாடல் மற்றும் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமான நாளாக அமையும். ஆன்மீகச் செலவுகளுக்கும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் பிரிவினருக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீனப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் உபாதைகளில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாகச் செல்வார்கள். வரவுக்கேற்ப செலவு செய்வார்கள். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவார்கள். மார்க்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே பலன்களே பொருந்தும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவார்கள். மார்க்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பி.க்களுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் திட்டமிட்டுப் படிப்பை முடிப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உத்யோகஸ்தர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவார்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். மாமியார்-மருமகள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதே பலன்களே பொருந்தும். ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் உபாதைகளில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாகச் செல்வார்கள். வரவுக்கேற்ப செலவு செய்வார்கள். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு உத்யோகஸ்தரின் பணிகள் சிறப்படையும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பணவரவு நன்றாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு விலகும். தம்பதிகள் இணைந்து செயல்படுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.