12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

Su.tha Arivalagan
Dec 29, 2025,11:41 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், மார்கழி 14 ம் தேதி திங்கட்கிழமை

இன்று காலை 04.41 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 04.04 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.04 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை 


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - நண்பர்களிடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில வேலைகள் தாமதமாகலாம். காதல் மலரும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களின் வருகை இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். பெற்றோரின் உடல்நலம் தேறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


ரிஷபம் - வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படலாம். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை அடையாளம் காண்பீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மிதுனம் - வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நீங்கள் மறுக்காமல் அவர்களுக்கு உதவுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கடகம் - பழைய நண்பர்களிடமிருந்து விடுபட்டு, புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வாகனம் மற்றும் வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உயர்தர ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவீர்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - அக்கம் பக்கத்தினருடன் நட்பு வலுப்பெறும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். உடல் வலிமை அதிகரிக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்.


கன்னி - இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பொதுவாக அமைதியாக இருப்பது நல்லது. இறைவனை வழிபடுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


துலாம் - வேலையில் அமைதியான போக்கு காணப்படும். நண்பர்களுடன் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். பணவரவு தாமதப்படலாம். உடல் ஆரோக்கியம் சீர்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகத்தில் வசீகரம் கூடும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


தனுசு -  பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி வந்து நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - பெற்றோரின் கனவுகள் பலிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.


கும்பம் - வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். பணவரவு தாமதப்படலாம். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவார்கள். மகன், மகள் திருமணத்தை சிறப்பாக நடத்துவார்கள். வீடு, மனை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மீனம் - பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். வேலையில் அமைதியான போக்கு காணப்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகள் விலகுவார்கள். பணவரவில் குறைவிருக்காது. நீண்ட நாட்களாக பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.