12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 01, 2025... நன்மைகளை பெற போகும் ராசிகள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 16ம் தேதி திங்கட்கிழமை
இன்று நாள் முழுவதும் நவமி திதி உள்ளது. இன்று இரவு 07.14 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு இரவு 07.14 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு சுப காரியத்தையும் துவங்க வேண்டாம். பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் அவர்கள் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க கூடாது.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொது விஷயங்களில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல் பேச வேண்டாம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கடகம் - கடக ராசிக்காரர்கள் மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் புது ஆர்டர்கள் பெற கொஞ்சம் அதிகமாக அலைய வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் அன்பாக பேசுவது நல்லது.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்திசாலித்தனத்தை பாராட்டுவார்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். முக்கியமான நபர்கள் அறிமுகமாவார்கள். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை நம்பி இருப்பவர்களின் நிலையை உணர்ந்து உதவுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் வேலையை சீக்கிரம் முடிப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரும். பொறுமை ரொம்ப அவசியம்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை நல்லபடியாக நடக்கும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். புதிய திட்டங்களை பற்றி யோசிப்பீர்கள். தம்பதிகளிடையே இருந்த மனஸ்தாபம் விலகும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு தோல்வி பயம் நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் நிறைய வரும். நிர்வாக திறமையால் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். விரைவில் உங்கள் படம் வெளியாகும். வேலையில் இருப்பவர்கள் அலுவலக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் பல மடங்கு லாபத்தை கொடுக்கும். திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களிடம் கோபப்பட வேண்டாம்.