12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 02, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 02 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 18 ம் தேதி வியாழக்கிழமை
காலை 04.02 வரை துவிதியை, பிறகு திரிதியை. அதிகாலை 01.31 வரை உத்திராடம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.31வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - கலை துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். லாபம் பெருகும். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
ரிஷபம் - மாற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். உறவினர்களால் லாபம் கிடைக்கும். புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மிதுனம் - இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களையும் தள்ளி வைக்கலாம். இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி காண வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
கடகம் - வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சீராகும். அரசியலில் புகழ் கூடும். வீட்டில் நிம்மதியான நிலை இருக்கும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.
சிம்மம் - உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். காரிய தடை விலகும். உத்தியோகத்தில் மரியாதை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களால் லாபம் கிடைக்கும். விரும்பியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கன்னி - பணப் பிரச்சனை நீங்கும். மனைவி மீதான அன்பு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். கோவில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு தொடர்பான செலவுகள் ஏற்படலாம்.
துலாம் - அரசியலில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செலவுகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம் - வழக்குகள் இழுபறியாகும். விலகி சென்றவர்கள் தங்களின் தவறை உணர்வார்கள். வெளிநாட்டு பயணம் உறுதியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
தனுசு - சகோதர வழியில் நன்மை ஏற்படும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். உத்தியாகத்தில் அமைதி நிலவும். செல்வாக்கு அதிகரிக்கும். பிரபலங்களின் சந்திப்பு ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அடிப்படை வசதிகளை மேம்படுத்த நினைப்பீர்கள்.
மகரம் - பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். உடல்நிலை சீராகும். வெளியூர் சென்று வர வாய்ப்புகள் ஏற்படும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
கும்பம் - யாரையும் நம்பி பண விஷயங்களில் இறங்க வேண்டாம். வீடு கட்ட கடன் கிடைக்கும். வெளி நபர்களிடம் நெருக்கம் வேண்டாம். பெண்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மீனம் - தொலைந்த பொருட்கள் கைக்கு கிடைக்கும். பிரிந்த காதல் ஒன்று சேரும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் ஈடேறும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்