12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 04, 2025... இன்று மகிழ்ச்சியை அனுபவிக்க போகும் ராசிகள்

Su.tha Arivalagan
Aug 04, 2025,10:17 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 19ம் தேதி திங்கட்கிழமை

காலை 11.33 வரை தசமி திதியும் பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று நாள் காலை 09.50 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும் , பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 01.45 முதல் 02.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் இறைவனை வழிபடுவது நல்லது. இன்று பல காரிய தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் ஏற்படும். 


ரிஷபம் - பயணத்தின்போது செல்போன் பேச வேண்டாம். விவசாயப் பொருட்களுக்கு விலை உயரும். தம்பதிகளுக்கு அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். 


மிதுனம் - கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருக்காது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் சந்தேகங்களை பெற்றோரிடம் கேட்பார்கள். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.


கடகம் - வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். கணவரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 


சிம்மம் - அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். வழக்குகள் இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையில் கைத்தொழில் கற்றுக்கொள்வார்கள். தம்பதிகள் இணைந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். 


கன்னி - உறவினர்கள் வருவார்கள். மாணவர்கள் உறவினர் வீட்டுக்கு விசேஷத்திற்காக செல்வார்கள். நண்பர்கள் உதவுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மார்க்கெட்டிங் செய்பவர்கள் இலக்கை முடிப்பார்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். 


துலாம் -   அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியூர் பயணம் செய்வீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக இருப்பார்கள். வரவுக்கு ஏற்ப செலவு செய்வார்கள். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்றாக நடக்கும். 


விருச்சிகம் - வேலையில் மதிப்பு கூடும். பணியாளர்களுக்கு வேலை அதிகம் இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். பயணத்தால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உண்மையாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். 


தனுசு -   வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளுக்கு அன்பு பெருகும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு, கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி நேர படிப்பில் சேருவார்கள். 


மகரம் - அரைகுறையாக நின்ற வேலை உடனே முடியும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி லாபம் வரும். தாய்வழி உறவினர்களிடம் மரியாதை கூடும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.  


கும்பம் -  கலைஞர்களுக்கு நல்ல நேரம். பெண் ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். மாமியார் மருமகள் சண்டை தீரும். 


மீனம் - பழைய வீட்டை சரி செய்வீர்கள். வியாபாரிகள் முதலீடு செய்வார்கள். தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நடக்கும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். செலவு கூடும். சிக்கனம் தேவை.