12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
May 05, 2025,11:02 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மே 05 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 22 ம் தேதி திங்கட்கிழமை

பகல் 01.02 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று மாலை 06.51 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.51 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 6 முதல் 7 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 09.30 முதல் 10.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை 


சந்திராஷ்டமம் -  பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - கணினித் துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் வேலையில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். மூத்த சகோதரர் மூலம் தங்களுக்கு நன்மை விளையும். விவசாயிகளின் கனவு நிறைவேறும். பெரியவர்கள் வெளியே செல்லும்போது மற்றவர்கள் துணையின்றி செல்வதை தவிர்ப்பது நல்லது. தேகம் பளிச்சிடும்


ரிஷபம் - தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதையும் இரண்டு முறை படிப்பது நல்லது. பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி நல்ல முடிவெடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். 


மிதுனம் - பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவி மூலம் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கலாம். உடல் மினுமினுக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து போவது நல்லது. 


கடகம் - அரசு டெண்டர்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளின் தேவைகள் பூர்த்தியாகும். அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் நலம் தேறும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். 


சிம்மம் - நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பணம் பல வழிகளில் வரும். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் நினைத்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.


கன்னி - குடும்பத் தலைவிகள் சொந்த ஊருக்கு சென்று வர நேரிடும். வியாபாரத்தில் தொய்வு இருக்காது. திட்டமிட்ட வேலைகள் தள்ளிப் போகலாம். பொறுமை அவசியம். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் டெபாசிட் செய்வீர்கள். உடலில் அசதி ஏற்படும்.


துலாம் -  வேலை செய்பவர்கள் மற்றவர்களின் விடுமுறையால் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவர். அவர்களால் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வயதானவர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சாப்பிடவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 


விருச்சிகம் - வேலை செய்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கலாம். பெண் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவார்கள். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். 


தனுசு - பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.


மகரம் - முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். சகோதர உறவு மேம்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். விட்டுக்கொடுத்து போவது அவசியம். வியாபாரம் நன்றாக இருக்கும்.


கும்பம் -  வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். காதலர்கள் சிந்தித்து செயல்படவும். தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசமாவார்கள். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள். உடல் நலம் மேம்படும். 


மீனம் - குடும்பத் தலைவிகள் வெளியில் செல்வதை தவிர்ப்பார்கள். தொலைபேசி மூலம் வேலைகளை முடிப்பார்கள். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். இளைஞர்கள் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். ஆக்கபூர்வமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.