12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 05, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும் ராசிகள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 05 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஐப்பசி 19 ம் தேதி புதன்கிழமை
மஹா அன்னாபிஷேகம். பெளர்ணமி. இன்று இரவு 07.27 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 10.14 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு காலை 10.14 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக அமையும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் சேரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். சில சமயங்களில் திடீர் கோபம் வந்து போகும். பணப் பிரச்சனைகள் நீங்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் வெற்றி காண்பார்கள். தம்பதிகளிடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் புதிய முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். சரியான நேரத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம் - கடக ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. அதிக விற்பனைக்காக வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய கிளை அல்லது புதிய இடத்தில் கடையைத் தொடங்குவீர்கள். பணப் பிரச்சனை இருக்காது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டு சுபகாரியங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். பேச்சாளர்கள் தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேற்று மொழிகளைக் கற்கத் தொடங்குவார்கள். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகள் இல்லை. வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத் தலைவிகளின் தேவைகள் நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கொழுப்பு சம்பந்தமான தொல்லை உள்ளவர்கள் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். தொழில் அதிபர்கள் தங்கள் வருவாயைப் பெருக்க திட்டமிடுவார்கள். உடல் நலம் பொலிவுடன் இருக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத பட்சத்தில், இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. மேலும், நீங்கள் வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தங்கள் குடும்ப விஷயங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. அவர்களால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டுப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர்கள். உடல் நிலை மேம்படும். அரசியல்வாதிகள் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் காதலை வெளிப்படுத்த இது ஏற்ற காலம். திருமணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்த துணை தேடி வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசியத் தேவையா என உணர்ந்து செலவு செய்யுங்கள். உத்தியோகத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு. முகத் தோற்றம் பொலிவுடன் இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.