12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 09, 2025... இன்று வெற்றி செய்தி தேடி வரும் ராசிகள்

Su.tha Arivalagan
Aug 09, 2025,09:57 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 24ம் தேதி வெள்ளிக்கிழமை

ஆவணி அவிட்டம். ரக்ஷா பந்தன். பகல் 02.26 வரை பெளர்மணி திதியும் பிறகு பிரதமை திதியும் உள்ளது. இன்று மாலை 04.04 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும் , பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - திருவாதிரை,புனர்பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - சிறிய வியாபாரம் தொடங்க இது ஒரு நல்ல நேரம். பெண்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் மாணவர்கள் சாதனை படைக்கலாம். கலைத்துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.


ரிஷபம் - வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் திடீர் மாற்றம் வரலாம். சில முடிவுகள் தாமதமாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.


மிதுனம் - வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தம்பதிகள் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். நண்பர்களை சந்திப்பீர்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். பணம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆகையால், இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். 


கடகம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான வேலை இருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். கடவுளை பிரார்த்தனை செய்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.


சிம்மம் - வாடிக்கையாளர்கள் உங்களால் சந்தோஷம் அடைவார்கள். அலுவலகத்தில் உங்கள் நேர்மையை பாராட்டுவார்கள். சர்க்கரை நோயாளிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும். கழுத்து மற்றும் முதுகு வலி வரலாம்.


கன்னி - குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண் சோர்வுக்கு தீர்வு காண வேண்டும். மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். 


துலாம் -   புதிய வியாபார திட்டங்களை உருவாக்குவீர்கள். குடும்ப வருமானத்தை அதிகரிக்க பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வெளியில் செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். அதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை படிப்பது நல்லது.


விருச்சிகம் - முக்கியமான வேலைகளை செய்து முடிக்க இது ஒரு நல்ல நாள். தவறாக புரிந்து கொண்டு பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். சகோதர உறவு மேம்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து போவது நல்லது. பணம் அதிகமாக வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


தனுசு -  குடும்பத் தலைவிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெரியவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். 


மகரம் - வேலை செய்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். அப்பாவின் வழியில் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாம். பெண் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசு ஏலங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.


கும்பம் -  மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாம். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். 


மீனம் - பிரபலமானவர்கள் உங்களுக்கு நண்பர்களாக ஆவார்கள். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வேலைகள் தள்ளிப் போகலாம். உடலில் சோர்வு ஏற்படும். வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.