12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 09, 2025... சுப காரியங்கள் கைகூடும்

Su.tha Arivalagan
Oct 09, 2025,09:50 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 23 ம் தேதி வியாழக்கிழமை

உலக பார்வை தினம், உலக அஞ்சல் தினம். காலை 03.48 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.08 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 02.08 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 1 முதல் 01.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். கணவர் வீட்டார் ஆதரவாக இருப்பார்கள். உணவில் கவனம் தேவை; எண்ணெய் ஆகாரங்களைத் தவிர்க்க வேண்டும். மார்கெட்டிங் பிரிவில் இருப்பவர்கள் புதிய ஆர்டர்கள் மற்றும் ஏஜென்சி பெறுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக சேமிப்பு திட்டங்களில் பணம் முதலீடு செய்வார்கள். பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் வலி வந்து நீங்கும். மார்கெட்டிங் பிரிவில் உள்ளவர்கள் அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்வார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் உள்ளவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உயரும். உடல் நலத்தில் சுறுசுறுப்பு அதிகரித்து, தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கடகம் - கடக ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும். போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்தியோகம் கிடைக்கும். கணினி துறையில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் கோபப்படாமல் பொறுமையைக் கையாள்வது நல்லது. மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை நிகழும். உடல் நலம் சீரடையும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மீக சிந்தனை மேலோங்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு அதிகரிக்கும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்குக் கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள் புதிய வாகனம் வாங்குவார்கள். எதிரிகள் காணாமல் போவார்கள். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்களில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு மிதமாக இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. விருந்தினர் வருகை உண்டு. வெளியூர் பயணம் தள்ளிப் போகும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. காத்திருந்த பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். கடன் தொல்லை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைகொடுப்பார்கள். முகம் புதுப்பொலிவு பெறும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவி கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வார்கள். அங்கு அவர்களுக்கு மரியாதை கூடும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களின் மனம் நிம்மதியாக இருக்கும். பெரிய கடனில் இருந்து விடுபடுவார்கள். அலுவலகத்தில் நற்பெயர் வாங்குவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவார்கள். வாகனம் ஓட்டும்போது முக்கிய ஆவணங்களை உடன் வைத்திருப்பது நல்லது. சுப காரியப் பேச்சுவார்த்தைகள் இனிதே நடந்தேறும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மன அழுத்தம் இருக்கலாம். இருப்பினும், நிதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் செய்தி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். வேலை தேடுபவர்களுக்குப் புது உத்தியோக வாய்ப்பு வரும். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரம் லாபம் தரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.