12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 10 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 27 ம் தேதி சனிக்கிழமை
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை. சனி மஹாபிரதோஷம். மாலை 06.47 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 01.45 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.45 வரை அமிர்தயோகம், பிறகு அதிகாலை 05.53 வரை சித்தயோகம், அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - குழந்தைகளுக்கு சந்தோஷம் இருக்கும். பெண்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்வார்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி இருக்கும்.
ரிஷபம் - பெண்கள் சிக்கனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். பணம் வரும். நண்பர்கள் ஆலோசனை சொல்வார்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
மிதுனம் - குடும்பத் தலைவிகள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். அரசு டெண்டர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு பணம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். வியாபாரம் நன்றாக நடக்கும்.
கடகம் - பெண்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள். அழகு நிலையம் ஆரம்பிக்க திட்டம் போடுவீர்கள். கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் உயரும்.
சிம்மம் - பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பார்கள். கணவரிடம் அனுசரித்து போவது நல்லது. உடல் நலம் தேறும். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு வேலை அதிகம் இருக்கும். ஆனால் வேலையை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள்.
கன்னி - பணம் வசூலாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் - வியாபாரத்தில் பணம் அதிகமாக வரும். இரவில் தூரம் போக வேண்டாம். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம் மற்றும் கிரகப்பிரவேசத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
விருச்சிகம் - வேலையில் கணவர் உதவி செய்வார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வருவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.
தனுசு - கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் உயர்கல்வி படிப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கும்.
மகரம் - புது கிளைகள் திறக்க திட்டம் போடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலையில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிரிகள் சரணடைவார்கள். பங்குச் சந்தையில் கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முறைகளில் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.
கும்பம் - கொஞ்சம் தூரம் பயணம் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கி பணம் வசூலாகும். மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் சண்டை போட வேண்டாம். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
மீனம் - இன்று உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று கடவுளை வணங்குவது நல்லது. ஏனென்றால் சந்திரன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.