12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஐப்பசி 25 ம் தேதி செவ்வாய்கிழமை
தேசிய கல்வி தினம். இன்று காலை 07.06 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 01.40 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 01.40 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
மேஷம் - அயல்நாட்டில் வேலை கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. கல்வியில் சிறப்பான வெற்றி கிடைக்கும். உடல் நலமும் மேம்படும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
ரிஷபம் - விலை உயர்ந்த பொருட்கள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களை சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சுத் தொழிலால் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் தொழிலில் பணம் வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மிதுனம் - விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்களின் வருகை உண்டு, அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம் - பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ் மற்றும் கௌரவம் உயரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சிம்மம் - உத்யோகத்தில் சில நிறை குறைகள் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அளவோடு பழகுவது சிறந்தது. பெரிய மனிதர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். மாமனாரின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
கன்னி - புதிய தொழில் தொடங்குவீர்கள். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். அதற்கான வேலைகளை இன்று தொடங்குவார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பாக சில கவலைகள் ஏற்படலாம். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் தாமதமாகலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
துலாம் - உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தாய் மற்றும் மகன் இடையேயான அன்பு பலப்படும். பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
விருச்சிகம் - வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியப் போக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
தனுசு - இன்று சந்திராஷ்டமம் என்பதால், யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல காரியத் தடைகள் ஏற்படலாம் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மகரம் - வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். காதல் மலர வாய்ப்புள்ளது. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம் - உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பல் வலி, மூட்டு வலி வந்து போகும். வேலையாட்களால் உதவிகள் கிடைக்கும். தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மீனம் - எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே அமையும். பணவரவு சற்று தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். உடல் பலம் பெறும். வியாபாரம் செழிக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.