12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 11, 2025... இன்று அன்பு பெருகும் நாள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 25 ம் தேதி சனிக்கிழமை
உலக பெண் குழந்தைகள் தினம். புரட்டாசி கடைசி சனிக்கிழமை. அதிகாலை 12.38 வரை சதுர்த்தி திதியும், பிறகு இரவு 10.22 வரை பஞ்சமி திதியும், அதற்கு பின் சஷ்டி திதியும் உள்ளது. இரவு 09.19 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை மரணயோகமும் பிறகு இரவு 09.19 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசியல் ரீதியாக சிறப்பானதாக அமையும். கட்சியில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நடக்கும். நண்பர்களிடம் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இது உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை தரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் போட்டி அதிகமாக இருந்தாலும், அதை வென்று லாபம் ஈட்டுவீர்கள். உங்கள் பூர்வீக சொத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்கு பணம் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. தம்பதியரிடையே கருத்து ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு பாதியில் நின்றுபோன கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணிகள் முழுமையடையும். உங்கள் அக்கா அல்லது தங்கை போன்ற மூத்த சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். தந்தை வழி சொத்து உங்களுக்கு வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். உடல்நிலை சற்று சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். இல்லையென்றால் முக்கியமான விஷயங்களில் தவறிவிடுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு, அவர்களின் கடின முயற்சியால் விரும்பிய வேலை கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது போன்ற காரியங்கள் லாபகரமாக முடியும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வீட்டை அலங்கரிப்பார்கள். சுப காரியங்கள் கைகூடும். நட்பு வலுப்பெறும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படலாம். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் என்பதால், முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால், சுப காரியங்களை தள்ளி வைப்பது சிறந்தது. இன்று இறைவனை வழிபடுவது உங்களுக்கு நன்மை தரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் அடைவார்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வார்கள். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும், லாபத்தை ஈட்டி விடுவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவார்கள். உங்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் புதிய நவீன நுட்பங்களைக் கையாள்வார்கள். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயங்களைப் பெறுவார்கள். சுப விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முடிந்தவரை சிக்கனமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணங்கள் ஈடேறும். தம்பதியரின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் விஷயங்களில் விழிப்பாக இருப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.