12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 14, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Su.tha Arivalagan
May 14, 2025,10:40 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மே 14 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 31 ம் தேதி புதன்கிழமை

சுபமுகூர்த்த நாள். அதிகாலை 12.31 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.35 வரை அனுஷம் நட்சத்திரம், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.00 வரை

கெளரி நல்ல நேரம் : 10.30 முதல் 11.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  அஸ்வினி, பரணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. முக்கியமான நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.


ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள். விவசாயிகளுக்கு கேட்ட கடன் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். உடல் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். 


மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு தாயின் அன்பு அதிகரிக்கும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை கேட்கவும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சனை தீரும். 


கடகம் - கடகம் ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். மாணவர்கள் நினைத்த கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும். கடனின் வட்டி தொகையை அடைத்து விடுவீர்கள்.


சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்கள் தீர்த்த யாத்திரை சென்று மகான்களை சந்திப்பீர்கள். தம்பதிகளுக்கு ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் பெருகும். உடல் நலம் சிறக்கும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். சில்லரை வியாபாரிகள் வியாபாரத்தில் கவனம் தேவை. திருமணம் உறுதியாகும். உடல் நலம் சிறப்பாகும். 


துலாம் -  துலாம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் உதவுவார்கள். நீண்ட நாள் கடமை ஒன்றை இன்று முடிப்பீர்கள். விருந்து, விழா என்று சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் சிறப்படையும். 


விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் ஆதாயம் காண்பார்கள். மனைவியிடம் கோபப்படாதீர்கள். பொறுமையாக இருப்பது நல்லது. தள்ளிப்போன வெளியூர் பயணம் இன்று செல்லும் வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும். பெண்கள் பேசும் போது நிதானம் தேவை. 


தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அண்டை வீட்டார் மூலம் நன்மை உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 


மகரம் - மகரம் ராசிக்காரர்களுக்கு குறுகிய தூர பயணங்கள் நன்மை தரும். தொழில் விரிவாக்கத்திற்கான வங்கி கடன் கிடைக்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வரும். சில்லரை வியாபாரம் லாபம் தரும். 


கும்பம் -  கும்பம் ராசிக்காரர்கள் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். மற்றவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வேலைச்சுமை இருக்கும். 


மீனம் - மீனம் ராசிக்காரர்கள் வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலைகளை முடிக்கவும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்பு கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும்.