12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2025... இன்று நன்மைகளை அதிகம் பெறும் ராசிகள்

Su.tha Arivalagan
Oct 16, 2025,10:33 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 30 ம் தேதி வியாழக்கிழமை

உலக உணவு தினம். பகல் 02.38 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. மாலை 05.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று மாலை 05.08 வரை சித்தயோகம் பிறகு அமிர்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் நீண்ட நாட்களாக நினைத்த நல்ல காரியம் நடக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். உங்கள் ஆலோசனைகளையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். 


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு, மனம் சாந்தமாகும். நல்ல துணை கிடைக்கும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல சம்பள உயர்வு உண்டு. பெண்கள் முன்னேறுவார்கள். கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும் என்பதால், விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள், கடையை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மாமியார் மற்றும் மாமனார் உறவு மேம்பட்டு அவர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். ஆனால், கை, கால்களில் வலி வந்துபோகும். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். 


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட, நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். உத்தியோகம் முன்பை விட சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். 


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். பழைய பிரச்சனைகளை தீர்க்க வழி பிறக்கும். பங்குதாரராக இருந்தால் லாபம் அதிகம் பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, ஓட்டல் வியாபாரம் சுமாராக இருக்கும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினர் ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவைப்படும். 


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள், சுவரொட்டி மற்றும் நாளிதழ் விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை கூடும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பெண்கள் நகை, விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பெண் பார்த்துச் சென்றவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். கௌரவப் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களின் போது மற்ற சிந்தனைகளை ஒதுக்குவது நல்லது. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 


தனுசு -  தனுசு ராசிக்காரர்கள், இன்று பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும். 


மகரம் - மகர ராசிக்காரர்கள், சொந்த வீடு வாங்குவீர்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். 


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு, வியாபாரம் அபார லாபத்தை தரும். பிள்ளைகள் தங்கள் சொல் படி நடப்பார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விலகுவார்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். உறவினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிர்பார்த்த நல்ல ஒரு விஷயம் நடக்கும். உடல் நலம் சிறக்கும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். காதல் விஷயத்தில் அவசரம் வேண்டாம். நண்பர்களிடம் விழிப்பாக இருப்பது நலம். குடும்பத்தை சற்று கவனத்தில் கொள்வது நல்லது. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.