12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 31ம் தேதி செவ்வாய்கிழமை
உலக ஓசோன் தினம். அதிகாலை 03.57 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. இன்று காலை 10.45 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு காலை 10.45 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
மேஷம் - சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். புது முதலீடுகளில் கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம் - வீட்டில் பண பற்றாக்குறை இருக்காது. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
மிதுனம் - நீண்ட நாள் நண்பரை சந்திப்பீர்கள். பயணத்தில் கவனம் தேவை. பிரபலமானவர்கள் நண்பர்களாக வாய்ப்பு உள்ளது. வழக்கறிஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் - வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் லாபம் உண்டாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வரலாம். அக்கம் பக்கத்தினர் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் நிம்மதி கிடைக்கும்.
சிம்மம் - வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் அதிக லாபம் கிடைக்கும்.
கன்னி - வேலை அதிகமாக இருக்கும். சக ஊழியர்களுடன் கலந்து பேசி வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
துலாம் - தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். மாணவர்கள் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம். வேலையில் புதிய திட்டங்களில் பங்கு பெறுவீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும்.
விருச்சிகம் - அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான வேலைகளை தவிர்க்கவும். இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சுப காரியங்களை தள்ளி வைக்கவும். இறைவனை வழிபடுவது நல்லது.
தனுசு - பெண்கள் சக ஊழியர்களுடன் கவனமாக இருக்கவும். கடின உழைப்பால் முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்யலாம். வயதானவர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மகரம் - வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் விற்பனையாகும். அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சகோதர உறவு மேம்படும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். பணவரவு கூடும்.
கும்பம் - மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத் தலைவிகள் வெளியில் செல்வதை தவிர்க்கவும். தொலைபேசி மூலம் வேலைகளை முடிக்கவும். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் சேமிப்பீர்கள்.
மீனம் - பெண்களுக்கு உடல் அசதி ஏற்படும். மருத்துவரை அணுகுவது நல்லது. இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்ட வேண்டாம். நிதானமாக செல்லவும். பிரிந்திருந்த மாமியார், மருமகள் ஒன்று சேருவார்கள்.