12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 18, 2025... இன்று மாற்றத்தை காண போகும் ராசிகள்

Su.tha Arivalagan
Jul 18, 2025,10:23 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 18 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 02ம் தேதி வெள்ளிக்கிழமை

ஆடி முதல் வெள்ளி. மாலை 04.11 வரை அஷ்டமி திதியும் பிறகு நவமி திதியும் உள்ளது. அதிகாலை 03.29 வரை ரேவதி நட்சத்திரமும், அதன் பிறகு அஸ்வினி  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 03.29 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் -  பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் உதவி கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம். நீங்கள் பேசும் விஷயங்களை சிலர் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் பேசும்போது கவனமாக இருங்கள். வியாபாரம் நன்றாக நடக்கும்.


ரிஷபம் - காதல் மலரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க ஆரம்பிப்பீர்கள். முக்கியமான நபர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


மிதுனம் - நல்ல வரன் கிடைக்கும். அண்டை வீட்டார் மூலம் நன்மை உண்டாகும். சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மன தைரியம் வரும். வெளியே போகும்போது ஹெல்மெட் அணிந்து அபராதத்தை தவிர்க்கலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.


கடகம் - பெண்களுக்கு திருமண கனவு நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி எடுக்கும் முன் பெட்ரோல் இருக்கிறதா, பிரேக் சரியா இருக்கான்னு பாருங்க. திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.


சிம்மம் - பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் படிப்பு சம்பந்தமான முயற்சிகள் கொஞ்சம் தாமதமாகலாம். கவலை வேண்டாம். அவர்கள் விரும்பிய படிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள்.


கன்னி - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கடவுளை மட்டும் வழிபடுவது நல்லது. இன்று பல தடைகள் வரலாம். அதனால் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாரிடமும் சண்டை போட வேண்டாம். மன குழப்பம் ஏற்படலாம். அதனால் ரொம்ப கவனமாக இருங்க. 


துலாம் -   அரசியல்வாதிகள் கட்சி தலைவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும். பங்கு சந்தையில் பணம் வரும். மாணவர்கள் நினைத்தது நடக்கும். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். பழைய காதல் திரும்ப வரும்.


விருச்சிகம் - உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். மகான்கள் மற்றும் ஆன்மீக குருக்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். சின்ன சின்ன விபத்துகள் வரலாம். கவனம் தேவை. வரவேண்டிய பணம் கைக்கு வரும்.


தனுசு -  கோவிலுக்கு சென்று வருவீர்கள். மனைவி வழியில் உள்ள உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பழைய வீட்டை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். வீட்டில் புதுசா ரூம் கட்டும் முயற்சி நல்லா முடியும். கல்யாண பேச்சு வார்த்தை நல்லபடியா முடியும்.


மகரம் - ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த ஒரு நல்ல விஷயம் குடும்பத்தில் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் மனைவி உங்களுக்கு உதவுவார். முக்கியமான நபர்களுடன் பழக்கம் ஏற்படும். பழைய வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லபடியா முடியும்.


கும்பம் -  பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும். மற்ற மதத்தை சேர்ந்தவங்க உதவி செய்வாங்க. அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். அலைச்சல் கொஞ்சம் அதிகமா இருக்கும். பேசும்போது கோபப்படாம பேசுங்க. குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பி தங்கச்சிங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அரசாங்கத்தால நன்மை உண்டாகும்.


மீனம் - இன்று நீங்க நினைச்ச காரியத்தை முடிக்க தைரியம் வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். தேவையில்லாத கௌரவத்துக்காக பணத்தை வீணாக்காதீங்க. வெளிய போகும்போது வயசானவங்க மாஸ்க் போட்டுட்டு போறது நல்லது. நோயிலிருந்து தப்பிக்கலாம்.