12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 18, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும் ராசிகள்

Su.tha Arivalagan
Oct 18, 2025,12:30 PM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 01 ம் தேதி சனிக்கிழமை

சனி மகா பிரதோஷம். பகல் 02.24 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.16 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று மாலை 06.16 வரை சித்தயோகமும் பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.15 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பிரிந்த உறவினர்கள் தேடி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்வார்கள். 


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவார்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். பிடித்த வெளியூர் பயணம் செல்வார்கள். மருத்துவர்கள் செழிப்பார்கள். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். யோகாவில் மனம் லயிக்கும். 


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு காதல் கண் சிமிட்டும். பெற்றோரை மனதில் வைப்பது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். 


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். 


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. 


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். பணவிசயங்களில் ஒருமுறைக்கு இருமுறை கவனம் தேவை. உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பெற்றோரின் கனவு பலிக்கும்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பார்கள். முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவார்கள். 


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.  


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும். 


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு விருந்தினர்கள் வருவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பார்கள். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். நண்பர்கள் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.