12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 03 ம் தேதி வெள்ளிக்கிழமை
பிரதோஷம். அதிகாலை 01.18 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இன்று காலை 09.29 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு 09.28 மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
மேஷம் - உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. கலைஞர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு புகழ் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகள் விளையாடும்போது கவனம் தேவை. சிறு காயங்கள் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
ரிஷபம் - குடும்ப நிர்வாகத்தில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். அடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். தள்ளிப்போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். ஆன்மீக சிந்தனை வரும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மிதுனம் - உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். சமாளித்துவிடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பியவாரே விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். படிப்பிலும் வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கோபம் குறையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பங்காளி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கடகம் - குடும்பத் தலைவிகள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கோயில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் செழிக்கும். உடல் நலம் தேறும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
சிம்மம் - பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். சென்ற நாட்களில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் தங்கள் கூட்டாளியிடம் மிகச் சரியாக நடந்து கொண்டு அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள். அழகுப் பொருள்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கன்னி - உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். குடும்பத் தலைவிகளுக்கு பணவரவுக்கு பஞ்சமில்லை. தாராளமாக செலவு செய்வர். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். இளைஞர்களுக்கு அரசு உத்யோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிமையாக முடியும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம் - உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். தள்ளி போட்ட திருமணம் இனிதே நிறைவேறும். உடல் நலத்திற்கு நன்மை உண்டாகும். யோகா போன்றவற்றை அனுதினமும் பயிற்சி செய்வது மன அமைதிக்கும் நன்மை தரும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.
விருச்சிகம் - ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்த்திருந்தவர்கள் விரும்பியபடியே பெற்று மகிழ்வீர்கள். சிலர் பணியில் இருந்து கொண்டே தனிப்பட்ட முறையில் துணைத் தொழில் ஒன்றை துவங்கி நடத்தி பெரும் தொகை ஈட்டி மகிழ இடமுண்டு. தடைபட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
தனுசு - உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மகரம் - உள்நாட்டில் இருப்பவர்களாலும் வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கிறது, அதற்கான ஊதிய உயர்வோ, சலுகைகளோ கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வரன் அமையும். வியாபாரிகளுக்கு திருப்பம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கும்பம் - நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பர். அதிர்ஷ்ட நிறம் கிரே.
மீனம் - வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு மந்தம், மறதி வந்து விலகும். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும். உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம் ஊதா.